ADDED : அக் 09, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல், தலைவாசல், வரகூரில் நெல் கொள்முதல் மையம் உள்ளது. அதற்கு புது கட்டடம் கட்ட, தலைவாசல் ஒன்றிய பொது நிதி மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், 33 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது.
ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம் தலைமை வகித்து, பணியை தொடங்கிவைத்தார். ஆத்துார் ஆர்.டி.ஓ., தமிழ்மணி, தலைவாசல் தாசில்தார் பாலாஜி, முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை உள்ளிட்ட தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.