/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அடையாள அட்டை அணிய டாஸ்மாக் ஊழியருக்கு உத்தரவு
/
அடையாள அட்டை அணிய டாஸ்மாக் ஊழியருக்கு உத்தரவு
ADDED : பிப் 17, 2024 07:13 AM
பனமரத்துப்பட்டி : சேலம் மாவட்டத்தில், 193 டாஸ்மாக் கடைளில், 1,100 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
பல கடைகளில் தின கூலிக்கு வெளியாட்களை வேலைக்கு வைத்து மது விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதுகுறித்து நம் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, டாஸ்மாக் கடைகளில் அனைத்து பணியாளர்களும் அடையாள அட்டை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்; வெளிநபர்கள் மது விற்பனையில் ஈடுபட்டிருப்பதை கண்டறிந்தால் போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்; கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, சேலம் மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளர் நர்மதாதேவி, மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.