/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கற்கள் ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி பறிமுதல்
/
கற்கள் ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி பறிமுதல்
ADDED : டிச 27, 2024 07:42 AM
ஓமலுார்: சேலம் மாவட்ட சுரங்கத்துறையில் உதவி புவியாளர் அரவிந்த், காடையாம்பட்டி தாலுகா தீவட்டிப்பட்டியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அரசு அனுமதியின்றி, 18 கன மீட்டர் கற்கள் ஏற்றிக்கொண்டு வந்தது தெரிந்தது. டாரஸ் லாரியுடன் கற்களை பறிமுதல் செய்த அரவிந்த், காடையாம்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தார். பின் அரவிந்த் புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல் கடந்த, 23ல், அரவிந்த் ஆய்வு செய்து, காடையாம்பட்டி தாலுகா மரக்கோட்டை, காடையாம்பட்டி தெற்கு கிராம பகுதிகளில், கனிமங்களை எடுத்து வந்த, 4 டிராக்டர், ஒரு டிப்பர் லாரி, ஒரு பொக்லைனை பறிமுதல் செய்தார். அந்த புகாரிலும், போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

