ADDED : நவ 22, 2026 01:18 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், அம்மாபேட்டை, சவுண்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ், 38; அதே பகுதியில் உள்ள ஓட்டலில், டீ மாஸ்டராக உள்ளார். இவர், 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அவரை எச்சரித்தும் திருந்தவில்லை. அதனால் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரால், அம்மாபேட்டை மகளிர் போலீசார் விசாரித்து, 'போக்சோ' சட்டத்தில் ஆனந்தராஜை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
