ADDED : ஆக 03, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் மாவட்டம் இடைப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர் செந்தில்குமரவேல், 58. இவர் மாணவியரிடம் சில்மிஷம் செய்த புகாரில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியை சீதா, ஆசிரியர்கள் ஜெயலட்சுமி, மல்லிகா, விஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் செந்தில் குமரவேலை, 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கபீர் நேற்று உத்தரவிட்டார்.

