/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை 12 மையங்களில் ஆசிரியர் பணி தகுதித்தேர்வு
/
நாளை 12 மையங்களில் ஆசிரியர் பணி தகுதித்தேர்வு
ADDED : நவ 14, 2025 01:50 AM
சேலம், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
சேலம் மாவட்டத்தில் உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு தாள் - 1, 2 ஆகியவை முறையே, நவ., 15(நாளை), 16ல் நடக்க உள்ளது. 15ல் நடக்கும் முதல் தாள் தேர்வு, 12 மையங்களில் நடத்தப்படும்.
இதில், 104 மாற்றுத்திறனாளிகள், சொல்வதை எழுதுபவர் துணையுடன், 10 பேர் உள்பட, 4,646 பேர் எழுத உள்ளனர். 16ல் நடக்க உள்ள, தாள் - 2 தேர்வு, 48 மையங்களில் நடக்க உள்ளது. அதில், 291 மாற்றுத்திறனாளிகள், சொல்வதை எழுதுபவர்கள் துணையுடன், 74 பேர் உள்பட, 18,847 பேர் எழுத உள்ளனர். இவர்களுக்கு அனைத்து அறிவுரைகளும் அனுமதிச்சீட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதுபவர்கள், சம்பந்தப்பட்ட நாளன்று காலை, 9:30 மணிக்கு முன், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மையங்களுக்குள் வந்து விட வேண்டும். தாமதமாக வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

