ADDED : ஏப் 20, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி:தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், வாழப்பாடியில் ஐம்பெரும் விழா, நேற்று நடந்தது. வட்டார தலைவர் கணேசன் தலைமை வகித்தார். அதில், பணி நிறைவு பெறும் ஆசிரியர்கள், 30 ஆண்டாக கல்வி பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, 'சீர்மிகு நல்லாசான்' விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து மாநில பொதுச்செயலர் காமராஜிக்கு, வட்டார கிளை சார்பில், 'இயக்கத்தின் இமயம்' விருது வழங்கப்பட்டது.
பின், 10, 20 ஆண்டாக சிறப்பாக கல்வி பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, கல்விச்சிகரம், இயக்க விழுதுகள் விருதுகள் வழங்கப்பட்டன. மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி, மாவட்ட தலைவர் ராஜேந்திரன், செயலர் பாஸ்கர், வட்டார செயலர் நாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

