/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெரியார் பல்கலையில் ஆசிரியர் தின விழா
/
பெரியார் பல்கலையில் ஆசிரியர் தின விழா
ADDED : செப் 06, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், சேலம் பெரியார் பல்கலையில் ஆசிரியர் தின விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. பல்கலை நிர்வாக குழு உறுப்பினர் சுப்ரமணி தலைமை வகித்தார். சேலம் டி.ஆர்.ஓ., ரவிக்குமார், 2024 - 25ம் ஆண்டு, சிறந்த ஆசிரியர் விருதை, சேலம் சாரதா மகளிர் கல்லுாரி
இணை பேராசிரியர் செல்வலட்சுமிக்கும், சிறந்த ஆராய்ச்சியாளர் விருதை, ராசிபுரம் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லுாரி உயிர் தொழில்நுட்பவியல் இணை பேராசிரியர் செல்வமாலீஸ்வரனுக்கும் வழங்கினார். பல்கலைநிர்வாகக்குழு உறுப்பினர் ஜெயந்தி, பதிவாளர் ராஜூ(பொ), பேராசிரியர்கள் பங்கேற்றனர்.