/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சம வேலைக்கு சம ஊதியம் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
/
சம வேலைக்கு சம ஊதியம் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 08, 2026 07:05 AM
சேலம்: இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில், தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலர் செந்தமிழ்செல்வன் பேசுகையில், ''சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, தொடர்ந்து, 13ம் நாளாக போராடி வருகிறோம். சேலம் மாவட்டத்தில், 560 இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் உள்ளனர். அதில், 507 பேர் இன்று(நேற்று) பணியை புறக்கணித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,'' என்றார்.
தொடர்ந்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட ஆசிரியர்கள், 'தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என, 311வது வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டது. அதை நிறைவேற்ற வேண்டும்' என கோஷம் எழுப்பினர்.

