/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உடல் எடையை குறைக்க 'டயட்' மயங்கி விழுந்து வாலிபர் பலி
/
உடல் எடையை குறைக்க 'டயட்' மயங்கி விழுந்து வாலிபர் பலி
உடல் எடையை குறைக்க 'டயட்' மயங்கி விழுந்து வாலிபர் பலி
உடல் எடையை குறைக்க 'டயட்' மயங்கி விழுந்து வாலிபர் பலி
ADDED : அக் 29, 2024 01:19 AM
உடல் எடையை குறைக்க 'டயட்'
மயங்கி விழுந்து வாலிபர் பலி
சேலம், அக். 29-
உடல் எடையை குறைக்க, 'டயட்' இருந்த வாலிபர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சேலம், கருங்கல்பட்டி, கல்கி தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் மணிகண்ட பெருமாள், 31, இவர் பி.பி.ஏ., படித்துவிட்டு, விசைத்தறி தொழிலுக்கான வைண்டிங் மிஷின் வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் செய்ய, பெண் தேடி வந்தனர். உடல் பருமனாகவும், தலை வழுக்கையாகவும் இருந்ததால், பலரும் பெண் தர மறுத்துள்ளனர். இதற்காக, இவர் உடல் எடையை குறைக்க, 'டயட்' இருந்து வந்துள்ளார். கடந்த, 26, மதியம் 1:30 மணிக்கு வீட்டில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற போது, ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து, செவ்வாய்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட மருத்துவ பரிசோதனையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது.