/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குஞ்சாம்பாளையத்தில் 3 ஆண்டுக்கு பிறகு திறக்கப்பட்ட கோவில்
/
குஞ்சாம்பாளையத்தில் 3 ஆண்டுக்கு பிறகு திறக்கப்பட்ட கோவில்
குஞ்சாம்பாளையத்தில் 3 ஆண்டுக்கு பிறகு திறக்கப்பட்ட கோவில்
குஞ்சாம்பாளையத்தில் 3 ஆண்டுக்கு பிறகு திறக்கப்பட்ட கோவில்
ADDED : மே 27, 2025 02:13 AM
இடைப்பாடி
இடைப்பாடி அருகே, குஞ்சாம்பாளையத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான அய்யனாரப்பன் கோவில், மூன்று ஆண்டு
களுக்கு பின் நேற்று திறக்கப்பட்டது.
இடைப்பாடி அருகே, குஞ்சாம்பாளையம் பகுதியில் அய்யனாரப்பன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. இடைப்பாடி, குஞ்சாம்பாளையம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, 400க்கும் மேற்பட்ட பங்காளி குடும்பத்தினர் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
இக்கோவில் பூசாரியான ஆணைகவுண்டர் என்பவர், பரம்பரை தர்மகர்த்தா என ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் மனு கொடுத்துள்ளார். இம்மனு, பங்காளிகள் தரப்பினருக்கு தெரிய வந்ததால் பூசாரி தரப்பினருக்கும், கருப்பண்ணன் உள்ளிட்ட மற்றொரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்னையால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோவில் பூட்டப்பட்டது.
இந்நிலையில், தன்னை பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என பூசாரி ஆணைகவுண்டர் அறநிலையத்துறையிடம் கொடுத்த மனுவையடுத்து, பூஜை செய்யலாம் என அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதையடுத்து, நேற்று சேலம் சஞ்சீவி ராயப்பேட்டை ஹிந்துசமய அறநிலையத்துறை தக்கார் செயல் அலுவலர் ராமஜோதி மற்றும் ஆய்வாளர் ஜோதிலட்சுமி, தேவூர் எஸ்.ஐ., அருண்குமார் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்புடன், பூட்டிய கோவிலை திறக்க முயன்றனர். அப்போது கருப்பண்ணன் தரப்பினர், கோவில் மீது வழக்கு
போட்டவரை கோவிலில் பூஜை செய்ய விடமாட்டோம் எனக்கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவிலை திறந்தாலும் வழக்கு தொடுத்துள்ள பூசாரி பூஜை செய்யக்
கூடாது எனக்கூறியதுடன், கோவில் கருவறையிலும், வழியிலும் உட்கார்ந்து தர்ணா செய்தனர். 4 மணி நேரமாக அதிகாரிகள் பேசியும், எந்த முடிவும் எட்டாததால் பிரச்னை முடியும் வரை யாரும் பூஜை செய்யக்கூடாது என உத்தரவிட்ட அதிகாரிகள், கோவிலை திறந்து வைத்து யாரும் பூஜை செய்யாமல் சுவாமியை வணங்கி விட்டு செல்லலாம் என உத்தரவிட்டனர். இதையடுத்து, அமாவாசையான நேற்று கோவில் திறக்கப்பட்டவுடன் ஏராளமானோர் பங்காளிகள் சுவாமியை வழிபட்டு
சென்றனர்.