/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிறுத்தப்பட்ட சாலை பணி: தற்காலிக சீரமைப்பு
/
நிறுத்தப்பட்ட சாலை பணி: தற்காலிக சீரமைப்பு
ADDED : பிப் 21, 2025 07:37 AM
இடைப்பாடி; இடைப்பாடி, ஆவணிப்பேரூர் கீழ்முகம் ஊராட்சி, வெள்ளாண்டி வலசு காமராஜ் நகர் மக்கள், தீயணைப்பு நிலையம் உள்ள சாலையை, பிரதானமாக பயன்படுத்துகின்றனர். அச்சாலையை சீரமைக்க, முதல்வர் கிராம சாலைகள் திட்டத்தில், 21.45 லட்சம் ரூபாயில், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் கடந்த ஆண்டு ஒப்பந்தம் விடப்பட்டது. 6 மாதங்களுக்கு முன் சாலையை உடைத்து பெரிய ஜல்லிக்கற்களால், ஒரு அடுக்கு சாலை போடப்பட்டது. மற்றொரு அடுக்கு சாலை அமைக்க வேண்டிய நிலையில், 5 மாதங்களாக பணி நிறுத்தப்பட்டது. இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர்.
இதுகுறித்து, கடந்த, 16ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, ஊரக வளர்ச்சி அதிகாரிகள் அறிவுறுத்தல்படி, ஒப்பந்ததாரர், ஜல்லிக்கற்கள் தெரியாதபடி மண் கொட்டி, ரோலர் மூலம் தற்காலிக சீரமைப்பு பணியை, கடந்த, 17ல் மேற்கொண்டார். மேலும் ஒன்றிய பொறியாளர் நியமனத்துக்கு பின், சாலை முழுமையாக போடப்படும் என, அதிகாரி கள் தெரிவித்தனர்.

