/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சைக்கிள் ஸ்டாண்டுக்கு குத்தகைதாரர்கள் எதிர்ப்பு
/
சைக்கிள் ஸ்டாண்டுக்கு குத்தகைதாரர்கள் எதிர்ப்பு
ADDED : டிச 24, 2025 08:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபா கமாலிடம், அங்குள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக குத்தகைதாரர்கள், 20க்கும் மேற்பட்டோர் நேற்று அளித்த மனு:
ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்டில், கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்துகிறோம். போக்குவரத்து வாகனங்கள், புது பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், இங்குள்ள கடைகளில் வியாபாரம் குறைந்துவிட்டது. தற்போது வணிக வளாக கடைகளை மறைத்து, கார், பைக் நிறுத்தும் சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்க முயற்சி நடக்கிறது. அப்படி அமைத்தால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கார், பைக் நிறுத்தும் ஸ்டாண்ட் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும்.

