/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., - த.வெ.க., மோதல் சூழலால் பதற்றம்
/
தி.மு.க., - த.வெ.க., மோதல் சூழலால் பதற்றம்
ADDED : நவ 27, 2025 02:11 AM
சேலம், மார்ச், 3ல் வரவுள்ள முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள், ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து, சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணா நகர் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு சுவரில், தி.மு.க.,வினர், இரு பேனர்களை வைத்திருந்தனர்.
மார்ச்சில் நடக்க உள்ள நிகழ்ச்சிக்கு, தற்போதே பேனர் வைத்து இடத்தை ஆக்கிரமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று இரவு, த.வெ.க., மத்திய மாவட்ட செயலர் பார்த்திபன் தலைமையில் அக்கட்சியினர் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதில் இரு கட்சியினர் இடையே மோதல் சூழல் உருவானது. அங்கு வந்த டவுன் போலீசார், பேச்சு நடத்தினர். அப்போது, 'அடுத்தாண்டு நிகழ்ச்சிக்கு இப்போது வைத்துள்ள பேனர்களை அகற்ற வேண்டும்' என, த.வெ.க.,வினர் முறையிட்டனர். பின் போலீசார் அறிவுரைப்படி, முறைப்படி, ஸ்டேஷனில் புகார் அளித்துவிட்டு, த.வெ.க.,வினர் சென்றனர்.

