/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நின்றிருந்த 'போர்வெல்' லாரியில் பைக் மோதி 2 தொழிலாளி பலி
/
நின்றிருந்த 'போர்வெல்' லாரியில் பைக் மோதி 2 தொழிலாளி பலி
நின்றிருந்த 'போர்வெல்' லாரியில் பைக் மோதி 2 தொழிலாளி பலி
நின்றிருந்த 'போர்வெல்' லாரியில் பைக் மோதி 2 தொழிலாளி பலி
ADDED : நவ 27, 2025 02:11 AM
ஆத்துார், கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி, கோனேரிப்பட்டியை சேர்ந்த, உமர்பாரூக் மகன் ஷாஜகான், 23, தாஸ் மகன் அரவிந்த், 27. நண்பர்களான இவர்கள், பெயின்ட் அடிக்கும் தொழில் செய்து வந்தனர். நேற்று இரவு, 8:00 மணிக்கு, கோனேரிப்பட்டியில் இருந்து கொண்டையம்பள்ளிக்கு, 'அப்பாச்சி' பைக்கில், ஹெல்மெட் அணியாமல் சென்றனர்.
கோனேரிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த போர்வெல் லாரி பின்பகுதியில், பைக்கை மோதியுள்ளனர். இருவரும் படுகாயம் அடைந்தனர். மக்கள் மீட்டு, தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பினர். ஆனால் இருவரும் இறந்தது தெரியவந்தது. தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
அரவிந்துக்கு மனைவி மகேஸ்வரி, 25, மகன் நவித், 3, மகள் இதழ்ஷா, 2, உள்ளனர். ஷாஜகானுக்கு மனைவி காவியா, 20, இரு குழந்தைகள் உள்ளனர்.