/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ராகவேந்திரா பள்ளியில் தன்னம்பிக்கை விழா
/
ராகவேந்திரா பள்ளியில் தன்னம்பிக்கை விழா
ADDED : நவ 27, 2025 02:11 AM
தலைவாசல், தலைவாசல், வீரகனுார் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, 'சிறகை விரி சிகரம் தொடு' தலைப்பில் தன்னம்பிக்கை விழா நடந்தது. பள்ளி தலைவர் லஷ்மிநாராயணன் தலைமை வகித்து பேசினார். பள்ளி செயலர் செல்வராஜு, பொருளாளர் பிரபா, கல்வி ஆலோசகர்கள் இளையப்பன், பழனிவேல், இயக்குனர் ராதாகிருஷ்ணன், ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினரான, புதுச்சேரி, போக்குவரத்து மற்றும் சைபர் கிரைம் பிரிவு, மூத்த காவல் கண்காணிப்பாளர் நித்யா, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
குறிப்பாக, கைபேசி தவிர்த்தல்; குறிக்கோளில் கவனம் சிதறாமல் விடாமுயற்சியுடன் லட்சியத்தை அடைய நன்றாக படித்து முழு மதிப்பெண் பெற்று மாநில அளவில் சாதனை படைக்க வாழ்த்தினார். மேலும் அரசு பொதுத்தேர்வை எதிர்கொள்ள, மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு கருத்துகள் வழங்கப்பட்டன. முதல்வர் ஹேமலதா உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

