ADDED : பிப் 07, 2025 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி: சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள காளிப்பட்டி கந்-தசாமி கோவிலில், தைப்பூச தேரோட்ட விழா இன்று மாலை, 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை மதியம், 1:00 மணிக்கு அபி ேஷகம், இரவு, 7:00 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்க உள்ளது.
அதேபோல் வரும், 9ல் அபிேஷகம், இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா, 10 இரவு, 10:00 மணிக்கு திருக்கல்யாணம், வள்ளி, தெய்வானை சமேத கந்தசாமி தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும். 11 மதியம், 2:30 மணிக்கு தேரோட்டம், 12 இரவு முத்துப்பல்லக்கில் வீதி உலா, 13 இரவு, மயில் வாகனம், சப்பரத்தில் புறப்பாடு, சத்தாபரண மகாமேரு, 14ல் வசந்த உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறும்.

