/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தங்கமயிலின் 57வது கிளை ஓசூரில் நாளை ஆரம்பம்
/
தங்கமயிலின் 57வது கிளை ஓசூரில் நாளை ஆரம்பம்
ADDED : ஜன 20, 2024 07:53 AM
ஓசூர் : தங்கமயில் ஜூவல்லரி நிறுவனம், 2011ல், சேலம் கடைவீதிலும், 2012ல், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் கிளைகளை தொடங்கியது. தற்போது தங்க மயில் நிறுவனத்தின், 57வது கிளை ஓசூரில் நாளை முதல் துவங்க உள்ளது.
திறப்பு விழாவின் முக்கிய அம்சமாக தங்கமயில் ஜூவல்லரி ஷோரூமிற்குள்ளேயே, தனது பிரத்யேக பிரைடல் ஸ்டோரை அறிமுகப்படுத்தி அதில் 'தங்க மாங்கல்யம்' என்ற தனித்துவமான திருமண நகை கலெக் ஷன்களையும் அறிமுகப்படுத்துகிறது. மணமகளுக்கு ஏற்ற தங்க, வைர ஆபரணங்கள், ரத்தின கற்களில் அமைந்த நகைகள், வெள்ளி நகைகள் என்று அனைத்திலும் திருமண நகைகளின் கலெக்ஷன்கள், டிசைன்களை ஒரே இடத்தில் வாங்கிடலாம்.
தரமான சேவை அளிக்க வேண்டும். ஒவ்வொரு தயாரிப்பையும் நியாயமான விலைக்கு வழங்க வேண்டும். குறுகிய கால வளர்ச்சியாக இல்லாமல், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையோடு நீண்ட காலம் பயணிக்க வேண்டும். இதுதான் எங்கள் இலக்கு என்று, தங்கமயில் ஜூவல்லரியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஓசூர் கிளை திறப்பு விழா சலுகையாக சிறப்பு ஆபர் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பவுன் தங்கத்திற்கு, 1,500 ரூபாய் தள்ளுபடி. வெள்ளி கிலோவிற்கு, 2,000 ரூபாய் தள்ளுபடி தரப்படுகிறது. வைரம் கேரட்டிற்கு, 1 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும், 1800 889 7080 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்