/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தோழமை கட்சி குறித்து தவறான பதிவு கூடாது காங்., நிர்வாகிகளுக்கு தங்கபாலு அறிவுறுத்த

ADDED : நவ 22, 2024 01:34 AM
தோழமை கட்சி குறித்து தவறான பதிவு கூடாது
காங்., நிர்வாகிகளுக்கு தங்கபாலு அறிவுறுத்தல்
சேலம், நவ. 22-
சேலம் காங்., கட்சியின் அடிப்படை கட்டமைப்பு, மறு சீரமைக்கப்படுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம், முள்ளுவாடி கேட் பகுதியில் நேற்று நடந்தது. மாநகர மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார்.
அதில் மத்திய முன்னாள் அமைச்சர் தங்கபாலு பேசியதாவது: மறுகட்டமைப்பு செய்யும்போது, மாவட்ட தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள், பகுதி, டிவிஷன் உள்ளிட்ட பொறுப்பாளர்களை சிரமமின்றி பார்த்துக்கொள்ள வேண்டும். தோழமை கட்சிகள், நண்பர்களை, காங்., கட்சியில் இணைக்கக்கூடாது. அக்கட்சி உறவு மிக முக்கியம். அவர்களால் பயன் பெற்றுள்ளோம். அதேநேரம் தோழமை கட்சி குறித்து யாரும் சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை வெளியிடக்கூடாது. மாணவர்கள், பெண்கள், இளைஞர்களை ஊக்குவித்து, கட்சியில் இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.கிராம, வட்டார, டவுன் பஞ்சாயத்து, மாநகர மண்டல, டிவிஷன், ஓட்டுச்சாவடி கமிட்டியை பலப்படுத்துவதற்கான சேலம் மாநகர மாவட்ட பொறுப்பாளர் சித்திக், கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.