/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'உணர்ச்சியோடு கூடிய சொற்களால் வடிவமைப்பதே கவிதை கலை'
/
'உணர்ச்சியோடு கூடிய சொற்களால் வடிவமைப்பதே கவிதை கலை'
'உணர்ச்சியோடு கூடிய சொற்களால் வடிவமைப்பதே கவிதை கலை'
'உணர்ச்சியோடு கூடிய சொற்களால் வடிவமைப்பதே கவிதை கலை'
ADDED : டிச 11, 2025 06:11 AM

சேலம்:சேலம், மனம் மாமன்றத்தின், 50வது பொன் விழா ஆண்டு, சண்-முகா செவிலியர் கல்லுாரி முத்தமிழ் அரங்கத்தில் கொண்டாடப்-பட்டது. மருத்துவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். சிரிப்பு மன்ற செயலர் பூபாலன் வரவேற்றார். துணைத்தலைவர் கவி-பாலா, செயலர் கலையமுதன் முன்னிலை வகித்தனர்.
தேசிய சமூக இலக்கிய பேரவை மாநிலத்தலைவர் தாரை அ.கும-ரவேலு, 'கவிதையும் வாழ்க்கையும்' தலைப்பில் பேசியதாவது:அன்றாட வாழ்க்கை முறை, எண்ணம், அனுபவம், எதிர்கால இலக்கு, சமூக மாற்றங்களை, உணர்ச்சியோடு கூடிய சொற்களால் வடிவமைப்பதே கவிதை கலை. கலைகளின் ராணியாக கவிதை சிறப்பிக்கப் படுகிறது.
பிள்ளையை பெற்றுத்தருவது தாயின் கடமை. பிள்ளையை சான்-றோனாக்குவது தந்தையின் கடமை. போர்ப்பயிற்சி தந்து சிறந்த வீரனாக்குவது அரசனின் கடமை. போர் புரிவதற்கான கருவி-களை செய்து கொடுப்பது கொல்லரின் கடமை. போருக்கு சென்று பெரிய யானையை கொன்று வென்று வருவது, அவ்வீர இளைஞனின் தலையாய கடமை என, வாழ்வின் கடமைகளை புறநானுாறு இப்படி தெளிவுபடுத்துகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து தங்கத்தமிழ் எழுதிய, 'விரல் அமரும் குருவி' எனும் கவிதை நுாலை, முன்னாள் எம்.எல்.ஏ., கவிஞர் கவிதைப்-பித்தன் வெளியிட்டார். தொடர்ந்து அவர், 'யாவரும் கேளீர்' தலைப்பில் நடந்த கவியரங்கத்துக்கு தலைமை தாங்கினார். பொன் வசந்தகுமார், மனம் மாமன்ற கவிஞர்கள், செவிலிய கல்-லுாரி மாணவ, மாணவியர், மக்கள் பங்கேற்றனர்.

