ADDED : டிச 11, 2025 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், தொங்கும் பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ''மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில், 2,05,491 மாற்றுத்திறன் பயனா-ளிகளுக்கு, 199.12 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன,'' என்றார். தொடர்ந்து, 143 மாற்றுத்திறனா-ளி
களுக்கு,
1.43 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், தன்னார்வ அமைப்பினர்களுக்கு பரிசு வழங்கினார். மேயர் ராமச்-சந்திரன், பா.ம.க.,வை சேர்ந்த, மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பக-வள்ளி, மாற்றுத்திறனாளி சங்க தலைவர் அத்தியண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

