நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், கன்னங்குறிச்சி அருகே கொண்டப்பநாயக்கன்பட்டி, அய்யன் முதல் தெருவை சேர்ந்தவர் குமார், 56. அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். இவரது மனைவி ப்யூலா, 46. இவர் தனியார் பள்ளி ஆசிரியை. பிரச்னையால், 8 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து தனித்தனியே வசித்தனர்.
இரு நாட்களாக, குமார் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இந்நிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீச, மக்கள் தகவல்படி, கன்னங்குறிச்சி போலீசார் வந்து, கதவை உடைத்து உள்ளே சென்றனர். கட்டிலில் குமாரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது.சடலத்தை கைப்பற்றி விசாரித்ததில், கடந்த, 3க்கு பின் அவர் வீட்டிலிருந்து வெளியே வராதது தெரிந்தது. விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா, உடல்நிலை பாதிப்பால் இறந்தாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

