ADDED : ஜூலை 20, 2025 05:42 AM
சேலம்: சேலம் மறை மாவட்டத்துக்குட்பட்ட அரசு, அதன் உதவி பெறு-பவை, மெட்ரிக் பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, இளம் மாணாக்கர் இயக்க தொடக்க விழா, 4 ரோடு, மூவேந்தர் அரங்கில் நேற்று நடந்தது. மூவேந்தர் மேய்ப்பு பணி நிலையம் சார்பில் நடந்த விழாவில், குழந்தை இயேசு பேராலய பங்குத்தந்தை ஜெய் பெர்னார்டு ஜோசப், அந்த இயக்-கத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, 59வது உலக தொலைத்தொடர்பு நாளையொட்டி, மாணவர்களுக்கு பாட்டு, நடனம், பேச்சு, ஓவியம், புகைப்பட போட்டிகள் நடத்தப்பட்டன. 17 பள்ளிகளை சேர்ந்த, 235 மாண-வர்கள், திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, ஓமலுார், செயின்ட் ஜோசப் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் விமல், பதக்கம் வழங்கி பாராட்டினார். அனைவருக்கும் சான்றி-தழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மூவேந்தர் மேய்ப்பு பணி நிலைய இயக்குனர் ஹென்றி கிேஷார் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.