/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பா.ம.க.,
/
போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பா.ம.க.,
ADDED : மே 19, 2024 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: சேலம் தெற்கு மாவட்ட பா.ம.க.,வை சேர்ந்த ஏராளமானோர், நேற்று, இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். தொடர்ந்து போலீசார் பேச்சு நடத்தினர். இதையடுத்து மாவட்ட செயலர் செல்வகுமார், மாவட்ட இளைஞரணி செயலர் ரவி, நகர செயலர் சண்முகம் உள்ளிட்டோர், போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனு:
நாம் தமிழர் கட்சியின், இடைப்பாடி, கேட்டுக்கடையை சேர்ந்த கார்த்திக், 'பொற்கிழிவேலவன்' பெயரில், 'எக்ஸ்' தளத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இறந்ததாக அவதுாறு பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, கேட்டுக்கடையில் ஓட்டல் நடத்தும் கார்த்திக், 27, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

