/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இல்லத்தில் தப்பிய சிறுவன் பைக் திருடி சிக்கினான்
/
இல்லத்தில் தப்பிய சிறுவன் பைக் திருடி சிக்கினான்
ADDED : நவ 18, 2024 03:10 AM
ஆத்துார்: தலைவாசல் அருகே வீரகனுாரில், கடந்த அக்டோபரில் பைக் திருட்டில் ஈடுபட்ட வழக்கில், 15 வயது சிறுவனை பிடித்தனர். அவனை, சேலம் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
கடந்த, 13ல் சிறுவன் தப்பினான். அஸ்தம்பட்டி போலீசார் வழக்-குப்
பதிந்தனர். 15ல் ஆத்துார், புதுப்பேட்டையை சேர்ந்த இம்ரான் அகமது, 35, வீட்டில், 'பல்சர்' பைக் திருடுபோனது. இதுகுறித்து ஆத்துார் டவுன் போலீசார் வழக்குப்பதிந்தனர்.
நேற்று முன்தினம், ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில், போலீசார் ரோந்து சென்றபோது பைக்கை நிறுத்திவிட்டு துாங்கி கொண்டி-ருந்த சிறுவன் குறித்து விசாரித்தனர்.
அதில், சேலம் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பியோடிய சிறுவன் என தெரிந்தது. அவனிடம், பைக்கை பறிமுதல் செய்-தனர். தொடர்ந்து நேற்று வழக்குப்பதிந்து, சேலம் கூர் நோக்கு இல்லத்தில் மீண்டும் ஒப்படைத்தனர்