/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கள்ளக்காதலியை கொன்று எரித்த கொடூரம்
/
கள்ளக்காதலியை கொன்று எரித்த கொடூரம்
ADDED : பிப் 03, 2024 03:23 AM
வாழப்பாடி: வாழப்பாடி அருகே பெண்ணை கொன்று, பட்டப்பகலில் வீட்டு முன் உடலை எரித்து தப்பிய கள்ளக்காதலனை, கொல்லிமலையில் போலீசார் சுற்றிவளைத்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி, மலையாளப்பட்டி அருகே அடையாளம் தெரியாத பெண் உடல் நேற்று மதியம் தீயில் எரிந்து கொண்டிருந்தது. வாழப்பாடி போலீசார் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்டனர். மலையாளப்பட்டி வி.ஏ.ஓ., அருள் புகார்படி விசாரித்த போலீசார், கொல்லிமலையை சேர்ந்த வல்லரசுவை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
மலையாளப்பட்டியில் வல்லரசு என்பவர், அவருடன் தங்கி இருந்த பெண்ணை கொன்றதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்றபோது வல்லரசு, அவரது வீட்டு முன் பட்டப்பகலில், பெண் உடலை எரித்துக்கொண்டிருந்தார். எங்களை பார்த்ததும் தப்பி ஓடினார். விசாரணையில் அந்தப்பெண், மயிலாடுதுறையை சேர்ந்த சுகுணா, 29, என்பதும், வல்லரசுடன் தகாத உறவில் ஈடுபட்டு வசித்ததும் தெரிந்தது.
சுகுணாவுக்கு ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடால் அவரை விட்டு பிரிந்து, மூன்றாண்டாக தனியே வசித்தார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்த வல்லரசுடன், மொபைல் போனில் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது. இதனால் மலையாளப்பட்டிக்கு அரளிப்பூ பறிக்கும் வேலைக்கு செல்வதாக வீட்டில் தெரிவித்துவிட்டு, சமீபத்தில் மலையாளப்பட்டியில் வல்லரசு வாங்கிய காட்டுக்கு வந்து அவருடன், சுகுணா வசித்தார்.
அவர்களிடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டதில், சுகுணாவை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின் உடலை வீட்டில் வைத்துவிட்டு கொல்லிமலைக்கு சென்றார். இந்நிலையில் வல்லரசுவின் தாய் அங்கு வர ரத்தக்கறை இருந்தது. சுகுணா இல்லாததால் சந்தேகப்பட்டு அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து கிடைத்த தகவல்படி மலையாளப்பட்டிக்கு சென்றபோது, சுகுணாவை தீ வைத்து எரித்துக் கொண்டிருந்த வல்லரசு தப்பி விட்டார். கொல்லிமலை அருகே மலைப்பகுதியில் சுற்றிவளைத்து பிடித்தோம். கொலைக்குரிய காரணம் குறித்து விசாரிக்கிறோம். கத்தி, பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு போலீசார் கூறினர்.

