/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுத்தையை கொன்ற வழக்கு 2 பேருக்கு நிபந்தனை ஜாமின் முன்னாள் தலைவருக்கு மறுப்பு
/
சிறுத்தையை கொன்ற வழக்கு 2 பேருக்கு நிபந்தனை ஜாமின் முன்னாள் தலைவருக்கு மறுப்பு
சிறுத்தையை கொன்ற வழக்கு 2 பேருக்கு நிபந்தனை ஜாமின் முன்னாள் தலைவருக்கு மறுப்பு
சிறுத்தையை கொன்ற வழக்கு 2 பேருக்கு நிபந்தனை ஜாமின் முன்னாள் தலைவருக்கு மறுப்பு
ADDED : அக் 24, 2024 01:32 AM
சிறுத்தையை கொன்ற வழக்கு
2 பேருக்கு நிபந்தனை ஜாமின்
முன்னாள் தலைவருக்கு மறுப்பு
மேட்டூர், அக். 24-
கொளத்துார், தின்னப்பட்டி ஊராட்சி வெள்ளக்கரட்டூர் முனியப்பன் கோவில் அருகே கடந்த மாதம், 27ல், 4 வயது ஆண் சிறுத்தை அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. அதன் பரிசோதனையில் சிறுத்தையை துப்பாக்கியால் சுட்டும், அடித்தும் கொன்றது தெரிந்தது.
வனத்துறையினர் விசாரணையில், கடந்த, 24 இரவு, ஒரு கும்பல் நாட்டு துப்பாக்கியுடன் சென்று சிறுத்தையை சுட்டதும், அது தப்பி ஓடி புதரில் மறைந்ததால் அடித்துக்கொன்றதும் தெரிந்தது.
இதுதொடர்பாக கடந்த, 30ல் தின்னப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் முனுசாமி, 50, பெரியகொட்டாய் மீனவர் ராஜா, 50, குப்பண்ணகவுண்டர் தெரு வாழைக்காய் வியாபாரி சசிகுமார், 44, ஆகியோரை மேட்டூர் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் ஒரு கார், ஒரு ஜீப், இரு நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் மூவரும் ஜாமின் கேட்டு, சேலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதில் ராஜா, சசிகுமாருக்கு மட்டும், நீதிமன்றம் கடந்த, 21ல் ஜாமின் வழங்கியது. எனினும் மறு உத்தரவு வரும் வரை, இருவரும் மேட்டூர் வனத்துறை அலுவலகத்தில் தினமும் கையெழுத்திட அறிவுறுத்தியது.
அதன்படி நேற்று இருவரும் வனத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட்டனர். முனுசாமிக்கு ஜாமின் கிடைக்கவில்லை. இதனால் அவரது வக்கீல், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார்.

