/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
4 ஆண்டுக்கு பின் துாக்கு தேர் திருவிழா
/
4 ஆண்டுக்கு பின் துாக்கு தேர் திருவிழா
ADDED : செப் 03, 2025 02:30 AM
கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி, தர்ம நகரில் உள்ள, எட்டடி முத்துசாமி, மாரியம்மன், செல்லியம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் தேர் திருவிழா நடத்தப்பட்டது.
இந்நிலையில், 4 ஆண்டுக்கு பின், திருவிழா நடத்த சுவாமி உத்தரவு கொடுத்ததால், கடந்த ஆக., 10ல், காப்பு கட்டுதலுடன் தேர் திருவிழா தொடங்கியது.
நேற்று, மாரியம்மன், செல்லியம்மன் தேர் திருவிழா நடந்தது. மூங்கிலால் செய்த, 20 அடி உயரத்தில் உள்ள, இரண்டு துாக்கு தேர்களை, முக்கிய வீதிகள் வழியே ஏராளமான பக்தர்கள், தோளில் சுமந்து ஊர்வலமாக, கோவிலுக்கு சென்றனர். மாரியம்மன், செல்லியம்மன் சுவாமிகள், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
அலகு குத்துதல்
தலைவாசல் அருகே புத்துாரில் உள்ள மாரியம்மன், கருப்பண்ணார் கோவிலில், கடந்த ஆக., 26ல், தேர் திருவிழா, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் கருப்பண்ணார் கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று மாரியம்மன் சுவாமிக்கு அலகு குத்துதல், முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.