/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆற்றில் ரசாயன கழிவு மூடப்பட்டது தரைப்பாலம்
/
ஆற்றில் ரசாயன கழிவு மூடப்பட்டது தரைப்பாலம்
ADDED : ஜன 18, 2024 02:23 AM

வீரபாண்டி:சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே இனாம் பைரோஜி ஊராட்சி புதுப்பாளையத்தில் இருந்து அரசம்பாளையம் வழியே, நாமக்கல் மாவட்டம் மின்னக்கல் - ராசிபுரம் சாலையில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தரைப்பாலம் வழியே தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை கழிவுநீரில் கலக்கப்பட்ட ரசாயன கழிவால் பொங்கி எழுந்த நுரை, தரைப்பாலம் முழுவதையும் மூடியது. 10 அடி உயரத்துக்கு பொங்கிய நுரையால் பாலத்தில் நடந்து கூட செல்ல முடியாமல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இரு மாவட்ட மக்களும், காணும் பொங்கலை கொண்டாட குல தெய்வ கோவில்கள், உறவினர் வீடுகளுக்கு செல்ல முடியாமல், 5 கி.மீ., சுற்றி, ஆட்டையாம்பட்டி வழியே சென்று சிரமத்துக்கு ஆளாகினர்.