sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காற்று, மின்னலுடன் மழை இடியால் தென்னை மரம் எரிந்தது

/

காற்று, மின்னலுடன் மழை இடியால் தென்னை மரம் எரிந்தது

காற்று, மின்னலுடன் மழை இடியால் தென்னை மரம் எரிந்தது

காற்று, மின்னலுடன் மழை இடியால் தென்னை மரம் எரிந்தது


ADDED : மே 15, 2025 01:26 AM

Google News

ADDED : மே 15, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்,காடையாம்பட்டி, அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை முதல், காற்று, இடி, மின்னல் ஏற்பட்டது. இரவு, 9:00 மணிக்கு, பூசாரிப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் இருந்த தென்னை மரத்தில் இடி தாக்கியது.

இதில் மரம் கொழுந்து விட்டு எரிந்தது. சிறிது நேரத்தில் தானாக அணைந்துவிட்டது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

ஏற்காட்டில் இரவு, 9:05 மணிக்கு பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது. 9:40 மணி வரை கொட்டி தீர்த்தது. அயோத்தியாப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில் மித மழை, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

சங்ககிரியில் மாலை, பலத்த காற்று, இடியுடன் தொடங்கிய கனமழை, 3 மணி நேரம் கொட்டியது. அங்கு, சேலம், இடைப்பாடி, திருச்செங்கோடு பஸ் ஸ்டாப்புகளில் நிழற்குடை இல்லாததால், பஸ்சுக்கு காத்திருந்த பயணியர், மழையால் சிரமத்துக்கு ஆளாகினர்.

அதேபோல் இடைப்பாடி அதன் சுற்றுப்பகுதிகளில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழை

பெய்தது.






      Dinamalar
      Follow us