/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உயர்கல்வி குறித்து தெரியாமல் திணறிய மாணவர்கள் ஆலோசனை வழங்க அலுவலருக்கு கலெக்டர் உத்தரவு
/
உயர்கல்வி குறித்து தெரியாமல் திணறிய மாணவர்கள் ஆலோசனை வழங்க அலுவலருக்கு கலெக்டர் உத்தரவு
உயர்கல்வி குறித்து தெரியாமல் திணறிய மாணவர்கள் ஆலோசனை வழங்க அலுவலருக்கு கலெக்டர் உத்தரவு
உயர்கல்வி குறித்து தெரியாமல் திணறிய மாணவர்கள் ஆலோசனை வழங்க அலுவலருக்கு கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 19, 2024 08:02 AM
ஆத்துார்: உயர்கல்வி குறித்து தெரியாமல் மாணவர்கள் திணறியதால் உரிய ஆலோசனை வழங்க, கல்வி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டம் ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாக்களில், 36 பள்ளிகளில் படித்து பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, 232 மாணவ, மாணவியர், உயர்கல்விக்கு செல்லாமல் இருப்பதை, கல்வித்துறை அலுவலர்கள் கண்டறிந்தனர். அவர்களுக்கு, ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், நான் முதல்வன் திட்டத்தில், 'உயர்வுக்கு படி' எனும் கலந்துரையாடல்
நிகழ்ச்சி நேற்று நடந்தது.கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில், 136 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்களிடம், உயர் கல்விக்கு தேவையான ஆலோசனைகளை எடுத்துரைத்த கலெக்டர், உயர்கல்விக்கு செல்லாமல்
இருப்பதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். அப்போது சில மாணவர்கள், உயர்கல்வி தகவல் குறித்து தெளிவான தகவல் தெரியாமல் திணறினர். உடனே, சேலம் முதன்மை கல்வி அலுவலர் கபீர் உள்ளிட்ட கல்வித்துறை, திறன் மேம்பாட்டு அலுவலர்களிடம் கலெக்டர் பிருந்தாதேவி, 'உயர்கல்வி குறித்து மாணவர்களுக்கு தெரியவில்லை. கலை, அறிவியல்
கல்லுாரி, இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பம் செய்வது குறித்தும் தெரியவில்லை. உயர்கல்வியில் உள்ள படிப்பு, அதன் விபரங்கள் குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். பள்ளி மாணவ,
மாணவியருக்கும், உயர்கல்வி குறித்த தகவல்களை, ஆசிரியர்கள் மூலம் எடுத்துரைக்க வேண்டும்' என உத்தரவிட்டார். மேலும் மாணவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்குங்கள் என, அங்கிருந்த அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.