/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழிலாளி அடித்துக்கொலை சமையல் மாஸ்டர் சிக்கினார்
/
தொழிலாளி அடித்துக்கொலை சமையல் மாஸ்டர் சிக்கினார்
ADDED : டிச 08, 2024 03:55 AM
சேலம்: சேலம், பொன்னம்மாபேட்டை, கோபால் செட்டி தெருவை சேர்ந்தவர் சிவகுமார், 52. கூலித்தொழிலாளி. இவருக்கு திருமண-மாகி ஒரு மகன் உள்ளார். குடும்ப பிரச்னையில், 2 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். சில மாதங்களாக சரியாக வீட்டுக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை, அப்ஸரா இறக்கத்தில் உள்ள நடைபாதையில் மயங்கி கிடந்தார். மக்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டவுன் போலீசார் விசாரித்தபோது, 'பணத்தகராறில் எனக்கு தெரிந்த ஒருவர், என் மீது தாக்குதல் நடத்தினார்' என தெரிவித்தார். பின் அவர் உயிரி-ழந்ததால், போலீசார் வழக்குப்பதிந்து, நாமக்கல்லை சேர்ந்த சமையல் மாஸ்டர் முகமது இப்ராகீம், 34, என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர், சிவகுமாரை தாக்கியது, கண்காணிப்பு கேம-ராவில் பதிவாகியுள்ளதால் அவரிடம் தொடர்ந்து போலீசார் விசா-ரிக்கின்றனர்.