/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தண்ணீரில் மூழ்கியபடி சிலம்பம் சுற்றி அசத்தல்
/
தண்ணீரில் மூழ்கியபடி சிலம்பம் சுற்றி அசத்தல்
ADDED : மார் 04, 2024 11:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: மல்லுார், அம்மாபாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் - மீனா தம்பதியின் மூத்த மகன் பரிஷித்ராஜ், 8. தனியார் பள்ளியில் படிக்கும் அவர் மல்லுாரில் உள்ள சிவம் சிலம்பம் அறக்கட்டளையில் பயிற்சி பெற்று வருகிறார்.
நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் நடந்த போட்டியில், 150 லிட்டர் கேன் தண்ணீரில் மூழ்கியபடி, இடைவெளி விட்டு, 65 நிமிடம் சிலம்பம் சுற்றினார். உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த அவருக்கு, ஆஸ்கார் உலக சாதனை நிறுவனம், சர்வதேச தற்காப்பு கலைக்கூடம், 'இளம் உலக சாதனையாளர் விருது' வழங்கியது. இவர் ஏற்கனவே ஆணி, ஐஸ் கட்டி மீது நின்றும் சிலம்பம் சுற்றி விருது பெற்றுள்ளார்.

