/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெருமாள் கோவில்களில் பகல் பத்து ஆரம்பம்
/
பெருமாள் கோவில்களில் பகல் பத்து ஆரம்பம்
ADDED : ஜன 01, 2025 06:17 AM
சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், வரும் 10 ல், சொர்க்கவாசல் திறக்கப்படுவதையொட்டி, பகல் பத்து உற்சவம் நேற்று மாலை, 6:00 மணிக்கு தொடங்கியது. முன்னதாக அங்குரார்ப்பணம் என்ற முலைப்பாலிகை போடப்பட்டு, உற்சவர் அழகிரிநாதருக்கு திருமஞ்சன வைபவம் நடந்தது. அதன்பின், திருமாமணி மண்டபத்தில் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து, நாலாயிர திவ்ய பிரபந்தம் ஓதி, 108 வகையான சீர்வரிசைகளுடன், கோவில் உள்வளாகத்தை வலம் வந்தபின், வேத, இதிகாச புராணங்கள் முழங்க விசேஷ ஆராதனை நடந்தது. அதையடுத்து, நம்மாழ்வாருக்கு முதல் மரியாதை செலுத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல, அனைத்து வைணவ கோவில்களிலும் பகல் பத்து நிகழ்ச்சி தொடங்கப்பட்டது என, சுதர்சன பட்டாச்சாரியார் தெரிவித்தார்.

