ADDED : நவ 05, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இறந்தவரின்
கண்கள் தானம்
ஆத்துார், நவ. 5-
ஓய்வு பெற்ற மாவட்ட உதவி கல்வி அலுவலரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
ஆத்துார், விநாயகபுரத்தை சேர்ந்தவர் அங்கமுத்து, 85. இவர், மாவட்ட உதவி கல்வி அலுவலராக இருந்து ஓய்வு பெற்றார். நேற்று வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மனைவி ஓய்வு பெற்ற ஆசிரியை செல்வமணி, மகனும், சேலம் முத்திரைத்தாள் தனி தாசில்தாருமான அன்புச்செழியன் ஆகியோர், இறந்த அங்கமுத்துவின் கண்களை தானம் வழங்க முடிவு செய்தனர்.
அதையொட்டி, ஆத்துார் ஆதவன் லயன்ஸ் கிளப் நிர்வாகிகளான தலைவர் கருப்பண்ணன், செயலர் அகிலன், சேவை செயலர் பாண்டியன், பொருளாளர் கார்த்திக், பட்டய தலைவர் சங்கர், முன்னாள் தலைவர் பாபு ஆகியோர் ஏற்பாட்டில், ஆத்துார் தனியார் கண் மருத்துவமனைக்கு, அங்கமுத்துவின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.