/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓடும் லாரியில் ரூ.5 லட்சம் சோப்பு திருட்டு புகார் அளிக்க 3 நாளாக காத்திருக்கும் டிரைவர்

ADDED : அக் 27, 2024 04:09 AM
ஆத்துார்: சங்ககிரி, ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன், 38. இவர் கடந்த, 22ல், புதுச்சேரியில் இருந்து, கேரளா மாநிலம் திருச்சூருக்கு, 21 டன்னில், 985 பெட்டிகளில் சோப்புகளை, லாரியில் ஏற்றியுள்ளார்.
அன்று இரவு, 8:40 மணிக்கு, சேலம் மாவட்டம் ஆத்துார் வழியே வந்தார். 23 அதிகாலை, செல்லியம்பாளையத்தில் ஒரு, 'டீ' கடை முன் நிறுத்தியுள்ளார். அப்போது லாரி மேற்பகுதியில் ஏறி பார்த்தபோது, அதன் நடுவே தார்ப்பாய் கிழிக்கப்பட்டு, 100 பெட்டிகளை மர்ம நபர்கள் திருடியுள்ளது தெரிந்தது. அதன் மதிப்பு, 5.40 லட்சம் ரூபாய். இதுகுறித்து அன்று, ஆத்துார் ஊரக போலீசில் புகார் அளிக்க லாரியுடன் வந்துள்ளார். அவரது புகாரை ஏற்க மறுத்துவிட்டதால், 3 நாளாக காத்திருக்கிறார். 'இ-வாகன் சேவை' என்ற டிரைவர்களின் தொண்டு நிறுவன அமைப்பு மூலம் திருட்டு தொடர்பாக, ஆன்லைனில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து முருகன் கூறுகையில், 'ஆத்துாரில் புகார் அளிக்க, 3 நாளாக காத்திருக்கிறேன்' என்றார்.
ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் கூறுகையில், ''லாரியில் சோப்பு திருட்டு குறித்து உளுந்துார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்யப்படுகிறது. புகாரின் உண்மை தன்மை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்,''