/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அம்பாள் - நடராஜர் சேர்த்து வைக்கும் நிகழ்வு தத்ரூபம்
/
அம்பாள் - நடராஜர் சேர்த்து வைக்கும் நிகழ்வு தத்ரூபம்
அம்பாள் - நடராஜர் சேர்த்து வைக்கும் நிகழ்வு தத்ரூபம்
அம்பாள் - நடராஜர் சேர்த்து வைக்கும் நிகழ்வு தத்ரூபம்
ADDED : ஜன 13, 2025 03:01 AM
தாரமங்கலம்: ஆருத்ரா தரிசனத்தையொட்டி, தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் நேற்று முன்தினம் சோமாஸ்கந்தர், கிரிஜாம்பாள் அம்-பாளுடன் திருக்கல்யாணம் நடந்து திருவீதி உலா நடந்தது. 2ம் நாளான நேற்று காலை, நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு தேன், பஞ்சாமிர்தம், பால் உள்பட, 16 வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடராஜர், அம்பாளுக்கு நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
மாலை, நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் திருவீதி உலா நடந்-தது. அதில் அம்பாள், நேற்று முன்தினம் சுவாமி, சோமாஸ்கந்தர் அவதாரத்தில் கிரிஜாம்பாளை கல்யாணம் செய்ததால், சண்டை-யிட்டு கோபித்துக்கொண்டு, அம்பாள் தனியே கோவிலுக்கு வந்-ததும் ராஜகோபுர கதவு அடைக்கப்பட்டது.
பின் கோவிலுக்கு வந்த நடராஜர் இருமுறை கதவை தட்டியும் திறக்காமல், 3ம் முறை தட்டும்போது கதவு திறக்கப்பட்டது. தொடர்ந்து உள்ளே இருக்கும் அம்பாளை, நடராஜருடன் சேர்த்து வைக்க, சுந்தரமூர்த்தி வேடமிட்டவர், பூசாரிகள், பாட்டுகள் பாடி சேர்த்து வைக்கும் நிகழ்வு தத்ரூபமாக காட்சிப்படுத்தபட்டது. அம்பாளை சமாதானம் செய்ததால், சுந்தரமூர்த்தி, பூசாரிகள், காணியாச்சுக்காரர்களுக்கு, வாழை மட்டையால், மட்டை அடி விழும் நிகழ்ச்சியும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோபுரம் முன் நின்று ரசித்தனர். தொடர்ந்து சுவாமி, கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு அனை-வருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.