/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆவணி அவிட்டத்தில் பூணுால் அணியும் விழா
/
ஆவணி அவிட்டத்தில் பூணுால் அணியும் விழா
ADDED : ஆக 10, 2025 02:25 AM
சேலம், ஆடி, ஆவணி மாதங்களில், அவிட்ட நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமி, ஆவணி அவிட்டமாகவும், ரிக், யஜூர் வேதங்களை கொண்டாடும் நாளாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதை ஒட்டி சேலத்தில் நேற்று, உபநயனம் செய்து கொண்ட பிராமணர்கள், அவர்களது தந்தை, ஆச்சாரியார், குரு ஆகியோரில் ஒருவர் மூலம், புது பூணுால் அணிந்து கொண்டனர்.
மேலும் வீடுகள், சமூக கூடங்கள், மண்டபங்கள், கோவில்களில், வேத மந்திரங்கள், காயத்ரி மந்திரம் முழங்க, பூணுால் அணிவித்து, வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் விஸ்வ
கர்மா மற்றும் செட்டியார் இனத்தை சேர்ந்தவர்களும், பூணுால் அணியும் பண்டிகையை கொண்டாடினர். குறிப்பாக வீடுகளை சுத்தப்படுத்தி, பொங்கல், சுண்டல் உள்ளிட்டவற்றை சுவாமிக்கு படைத்து, சவுடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று பூணுால் அணிந்து கொண்டனர்.