ADDED : அக் 14, 2025 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: மல்லுார் அத்திக்குட்டையில், நீண்ட காலமாக தேங்கிய கழிவு நீர் பச்சை நிறத்துக்கு மாறி துர்நாற்றம் அடிக்கிறது. அத்திக்குட்டையின் மேற்கு, தெற்கு பகுதியில் ஏழை மக்கள் வீடு கட்டி குடியிருக்கின்றனர்.
மல்லுார் டவுன் பஞ்சாயத்து சார்பில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தடுப்புச்சுவர், உபரி நீர் வெளியேற வாய்க்கால், நடைபாதை, பூங்கா உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக, அத்திக்குட்டையில் இருந்த கழிவு நீரை, ஆயில் மோட்டார் வைத்து வெளியேற்றும் பணி நடந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, கன மழை பெய்ததால், அத்திக்குட்டை நிரம்பியது. சில வீடுகளில் தண்ணீர் புகுந்தது. டவுன் பஞ்சாயத்து சார்பில், பொக்லைன் மூலம் வாய்க்கால் பறித்து, கழிவுநீரை வெளியேற்றும் பணி நடந்தது வருகிறது.