/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாய்களுக்கு தடுப்பூசி வரும் 17 முதல் முகாம்
/
நாய்களுக்கு தடுப்பூசி வரும் 17 முதல் முகாம்
ADDED : டிச 15, 2024 03:15 AM
சேலம்: சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: மாவட்டத்தில், ரெயின் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, கால்நடை பராம-ரிப்புத்துறை சார்பில், நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.
அதன்படி வரும், 17ல் இடைப்பாடி, வெள்ளாளபுரம், தேவூர், காடையாம்பட்டி, மகுடஞ்சாவடியில் முகாம் நடக்கும். 18ல் டேனிஷ்பேட்டை, கொளத்துார், குட்டப்பட்டி, தாரமங்கலம், காமலாபுரம், ஜலகண்டாபுரம், ஓமலுார்; 19ல் சிங்கிபுரம், திப்பம்-பட்டி, மேட்டுப்பட்டி தாதனுார், வேடுகாத்தாம்பட்டி, பெருமாக-வுண்டம்பட்டி; 20ல் மஞ்சினி, ஊனத்துார், தம்மம்பட்டி, ஏத்-தாப்பூர் கிராமங்களில் நடக்கும் முகாம்களில், நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணி இலவசமாக மேற்கொள்ளப்-படுகிறது.அதனால் செல்லப்பிராணிகளை வெறிநோயில் இருந்து பாதுகாத்-துக்கொள்ளவும், அதன்மூலம் மனிதர்களும் வெறிநோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளும்படியும், இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.