/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இயந்திரத்தில் சிக்கி சிறுமியின் கை நசுங்கியது
/
இயந்திரத்தில் சிக்கி சிறுமியின் கை நசுங்கியது
ADDED : மே 29, 2024 07:53 AM
சேலம் : சேலம், களரம்பட்டியை சேர்ந்தவர் மாது, 42.
செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே கரும்பு ஜூஸ் தயாரித்து விற்கிறார். நேற்று காலை, 10:00 மணிக்கு அவரது கடைக்கு செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த சுரேஷ், அவரது மகள் கனிஷ்கா, 9, ஆகியோர், ஜூஸ் குடிக்க வந்தனர். மாது ஜூஸ் ஊற்றிய நிலையில், கரும்பு ஜூஸ் பிழியும் இயந்திரத்தில் கனிஷ்காவின் இடது கை சிக்கியது. அவள் அலறி துடிக்க மாது, சங்கர், அப்பகுதியினர், குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையின் விரல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.