/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தெடாவூரில் ஆட்டுச்சந்தை வீரகனுார் வெறிச்சோடியது
/
தெடாவூரில் ஆட்டுச்சந்தை வீரகனுார் வெறிச்சோடியது
ADDED : ஜூலை 20, 2025 05:47 AM
கெங்கவல்லி: தலைவாசல் அருகே வீரகனுாரில் ஆட்டுச்சந்தை நடந்து வந்-தது. அங்கு அதிகளவில் சுங்க கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதனால் கடந்த ஜூன், 20ல் தெடாவூரில் வியாபாரிகள்  ஆட்டுச்சந்தை நடத்த தொடங்கினர்.
அங்கு அனுமதி பெறாத நிலையில் தொடர்ந்து சந்தை நடத்தப்-பட்டு வருகிறது. 5ம் வாரமாக நேற்றும் சந்தை கூடியது. ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 600க்கும் மேற்பட்ட ஆடுகளை, விவசாயிகள் கொண்டு வந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்து வந்த வியாபாரிகளும், ஆடுகளை வாங்கிச்சென்றனர். இதனால் சந்தை களைகட்டியது. அதேநேரம் வீரகனுார் சந்தைக்கு வியாபாரிகள் செல்லாததால், அங்கு வெறிச்-சோடியது.

