/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசே ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றியை பெற்றுள்ளது: தங்கபாலு
/
அரசே ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றியை பெற்றுள்ளது: தங்கபாலு
அரசே ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றியை பெற்றுள்ளது: தங்கபாலு
அரசே ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றியை பெற்றுள்ளது: தங்கபாலு
ADDED : நவ 20, 2025 02:39 AM
இடைப்பாடி, முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாள் விழா, இடைப்பாடி யில் நேற்று கொண்டாடப்பட்டது. சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். அதில் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு முன்னிலையில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய, 200க்கும் மேற்பட்டோர், காங்., கட்சியில் இணைந்தனர்.
தொடர்ந்து தங்கபாலு அளித்த பேட்டி:
பீஹார் தேர்தலில், 65 லட்சம் ஓட்டுகளை நீக்கி, 1.50 கோடி பெண்களுக்கு, 10,000 ரூபாய் கொடுத்து வெற்றியை பெற்றுள்ளார்கள். அரசாங்கமே ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றியை பெற்றுள்ளது இதுதான் முதல்முறை. இந்த ஜனநாயக படுகொலையை மக்கள் விரைவில் தெரிந்து கொள்வர். பா.ஜ.,வும் தேர்தல் கமிஷனும் நடத்தும் தில்லுமுல்லு களை, ராகுல் படம் பிடித்து காட்டுகிறார். விரைவில் இந்தியாவில் புது மாற்றம் வரும். தமிழகத்தில் பா.ஜ.,வையும், அதனுடைய தாக்கங்களையும், தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நகர தலைவர் நாகராஜன், நகராட்சி துணை தலைவர் ராதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல் தாரமங்கலம் நகர காங்., சார்பில், நகர தலைவர் சண்முகம் தலைமை வகித்து, இந்திரா படத்துக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

