/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தண்ணீர் தொட்டியில் விழுந்த செவிலிய கண்காணிப்பாளர் பலி
/
தண்ணீர் தொட்டியில் விழுந்த செவிலிய கண்காணிப்பாளர் பலி
தண்ணீர் தொட்டியில் விழுந்த செவிலிய கண்காணிப்பாளர் பலி
தண்ணீர் தொட்டியில் விழுந்த செவிலிய கண்காணிப்பாளர் பலி
ADDED : நவ 20, 2025 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், எஸ்.கொல்லப்பட்டி, மேட்டுக்காடு டாக்டர் காலனியை சேர்ந்த, கோவிந்தராஜ் மனைவி உமாமகேஸ்வரி, 58. ஓமலுாரில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலிய கண்காணிப்பாளராக பணியாற்றினார். நேற்று முன்தினம், உமா மகேஸ்வரி வீட்டில் இருந்தபோது, நிலத்தடியில் உள்ள தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தார்.
அப்போது தவறி, தொட்டிக்குள் விழுந்துவிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த அவரது மகள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், உமாமகேஸ்வரியை மீட்டார். பின் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.