/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மக்களின் தேவையறிந்து அரசு செயல்படுகிறது; சேலம் எம்.பி.,
/
மக்களின் தேவையறிந்து அரசு செயல்படுகிறது; சேலம் எம்.பி.,
மக்களின் தேவையறிந்து அரசு செயல்படுகிறது; சேலம் எம்.பி.,
மக்களின் தேவையறிந்து அரசு செயல்படுகிறது; சேலம் எம்.பி.,
ADDED : டிச 31, 2024 07:38 AM
இடைப்பாடி: ''மக்களின் தேவையறிந்து, தி.மு.க., அரசு செயல்பட்டு வருகிறது,'' என, இடைப்பாடியில் நடந்த ரேஷன் கடை திறப்பு விழாவில், சேலம் எம்.பி., செல்வகணபதி பேசினார்.
இடைப்பாடி அருகே, மல்லிபாளையத்தில் புதியதாக திறக்கப்பட்ட ரேஷன்கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. செட்டிமாங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் நல்லதம்பி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், 13 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடத்தை சேலம் எம்.பி., செல்வகணபதி திறந்து வைத்து பேசியதாவது: தமிழக மக்களின் தேவையறிந்து, தி.மு.க., அரசு செயல்பட்டு வருகிறது. மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண் திட்டம், இலவச பஸ் பயணம், தமிழ் புதல்வன் திட்டம், காலை உணவுத்திட்டம் உள்ளிட்டவை மக்களின் தேவைக்காக செயல்பட்டு வருகிறது. நாங்கள் கொண்டு வந்த நல்ல திட்டங்களை செயல்படுத்தியதால்தான் லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம். சேலம் மாவட்டத்தில், தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு, 146 ரேஷன் கடைகளை திறந்து வைத்துள்ளோம். இவ்வாறு பேசினார்.
தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், பூவாகவுண்டர், நகராட்சி தலைவர் பாஷா, ஆவணிப்பேரூர் கீழ்முகம் ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் மணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.