/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு வசமானது துளுவ வேளாளர் சமுதாயக்கூடம்
/
அரசு வசமானது துளுவ வேளாளர் சமுதாயக்கூடம்
ADDED : அக் 26, 2025 01:16 AM
சேலம், சேலம், செவ்வாய்ப்பேட்டை கபிலர் தெருவில் துளுவ வேளாளர் சமுதாய கூடம், 2,283 சதுர அடியில், இரு மாடிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
அதில் நடராஜர் பஜனை மடம் மட்டுமின்றி, திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பில் இருந்த பஜனை மடம், மண்டபத்துக்கு, 2023ல் கோபிநாத் என்பவர், அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அதை நிர்வாகித்து வந்தவர்கள், பொறுப்புகளை, கோபிநாத்திடம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தினர். இதுதொடர்பாக அறநிலையத்துறையினர், கடிதம், எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியும் பலனில்லை.
இந்நிலையில் நேற்று, சேலம் மாவட்ட உதவி கமிஷனர் ராஜா தலைமையில் அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன், சமுதாயக்கூடத்துக்கு சென்றனர். பின் மண்டப கட்டடத்தை, அறநிலையத்துறை வசம் எடுத்து, கோபிநாத் பொறுப்பில் ஒப்படைத்தனர்.

