/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விஜய் பிரசாரத்துக்கு தேர்வாகியுள்ள இடம் ஹிந்து சமய அறநிலையத்துறை எதிர்ப்புஈரோடு:

ADDED : டிச 12, 2025 08:36 AM
த.வெ.க., தலைவர் விஜய், பெருந்துறை அருகே சரளையில் வரும், 18ல் வாகன பிரசாரம் செய்யவிருப்பதாக, அக்கட்சி நிர்வா-கக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரி-வித்துள்ளார்.
இதற்கு போலீஸ் தரப்பில், 84 நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிறுகிறுத்துப்போன நிலையில், 18ல் திட்டமிட்டபடி விஜய் பிரசாரம் நடக்குமா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. மறுபு-றத்தில் சரளையில் பிரசாரத்துக்கு செய்ய தேர்வு செய்யப்பட்-டுள்ள, 19 ஏக்கர் நிலம், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்-பாட்டில் உள்ள விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான, 31 ஏக்கர் பரப்பின் ஒரு பகுதியாக உள்ளது. இதனால் கோவில் இடத்தில் அரசியல் கட்சி நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க கூடாது என்று, மாவட்ட நிர்வாகத்துக்கு ஹிந்து சயம அறநிலையத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை மண்டல இணைய ஆணையாளர் பரஞ்ஜோதி கூறியதாவது:
பிரசாரம் நடத்த, ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் த.வெ.க., அனுமதி பெறாத நிலையில், அங்கு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக்
கூடாது என்று, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு எங்கள் துறை தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.