ADDED : டிச 12, 2025 08:35 AM
ஈரோடு: பாரதியாரின், 143வது பிறந்த நாள் விழா, ஈரோடு கருங்கல்பா-ளையத்தில் உள்ள நுாலகத்தில், நேற்று கொண்டாடப்பட்டது. இங்குள்ள பாரதியாரின் மார்பளவு சிலைக்கு, பள்ளி மாணவ-மா-ணவியர் மற்றும் வாசகர் வட்டத்தினர், வாசகர்கள் மாலை அணி-வித்து மரியாதை செலுத்தினர். ஏற்பாடுகளை நுாலகர் கலைச்-செல்வி செய்தார்.
* பவானி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சுற்று வட்டார பகுதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பாராதி-யாரின் பிறந்தநாள் நேற்று கொண்டாட்டப்பட்டது. அவரது உரு-வப்படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, அவரது பாடல்களை பாடினர். * அந்தியூர் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், பாரதியாரின் 144வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழ்த்துறை விரிவுரையாளர் பிரகாஷ் வரவேற்றார். முதல்வர் நிர்மலாதேவி தலைமை வகித்து, பாரதியாரின் மொழி ஆளுமை பற்றி பேசினார். பாரதி-144 என்ற தலைப்பில், மாணவ, மாணவியர் கவிதை வாசிப்பு போட்டி நடத்தப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ் இலக்கிய பிரிவில் மாணவிகள், காயத்ரி, தமிழரசி முதலிடம்; கணிணித்துறை மாணவி சந்தியா, ஆங்கிலத்துறை மாணவி பூஜா இரண்டாமிடம்; ஆங்கிலத்துறை கலைவாணி, தமிழ் இலக்கியத்துறை ஆராத்தியா மூன்றாமிடம் பிடித்தனர். இவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

