/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விடுதிக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை
/
விடுதிக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை
ADDED : நவ 30, 2024 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: மல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி உள்ளது.
அங்கு, 20 மாணவியர் உள்ளனர். அங்கு தனியே வார்டன் இல்லை. சேலத்தில் உள்ள மற்றொரு விடுதி வார்டன், கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார்.இதுகுறித்து மல்லுார் டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அய்யனார் கூறுகையில், ''மாணவியர் விடுதி பின்புறம் கரடு உள்ளது. வேலி இருந்தாலும் அதன் வழியே பள்ளிக்குள் வெளி ஆட்கள் நுழைய வாய்ப்புள்ளது. இரவில் விடுதி மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அங்கு ஒரு பெண் காவலர் மட்டும் பணியில் உள்ளதால் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.

