/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மின் கட்டண உயர்வால் தொழில் நலிந்துவிட்டது'
/
'மின் கட்டண உயர்வால் தொழில் நலிந்துவிட்டது'
ADDED : ஆக 25, 2025 03:47 AM
சேலம்: சேலத்தில், சி.ஐ.டி.யு., 14வது மாவட்ட மாநாடு, நேற்று முன்தி னம் தொடங்கியது. நிறைவு நாளான நேற்று, மாவட்ட தலைவ-ராக உதயகுமார், செயலர் கோவிந்தன், பொருளாளர் இளங்கோ உள்பட, 19 நிர்வாகிகள், மாவட்ட குழு உறுப்பினர்கள் என, 47 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாலையில் ஊர்வலம் நடந்தது.
மாநில துணை பொது செயலர் ஆறுமுக நயினார், தொடங்கி வைத்தார். சேலம் காந்தி சாலை சந்திப்பில் தொடங்கிய ஊர்-வலம், வின்சென்ட், அரசு கல்லுாரி, திருவள்ளூவர் சிலை வழியே, மாநாடு நடக்கும் கோட்டை மைதானத்தை அடைந்தது. அங்கு கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார்.மாநில தலைவர் சவுந்திரராஜன் பேசுகையில், '4 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் மின் கட்டணம், 50 சதவீதம் உயர்த்தப்பட்-டதால், தொழில்கள் நலிந்து, 1,000க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிலகங்கள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளிகளுக்கு குறைந்த-பட்சம், 26,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். எந்த நிறுவ-னமும் வழங்குவது கிடையாது. தொழிலாளர்களுக்கு எந்த வாக்கு-றுதியையும், தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. அதனால் தனி கவனம் செலுத்தி, தொழிலாளரின் பிரச்னையை தீர்க்க வேண்டும்,'' என்றார்.